பல்சுவை செய்திகள்

யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!! (வீடியோ)

சுன்னாகத்தில் ஆவா குழு ரௌடிகள் வாகனங்களால் மோதி விபத்தை ஏற்படுத்தி, வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பகல் சுன்னாகம் சந்திக்கு அண்மையில் இந்த பயங்கர மோதல் நடந்துள்ளது.

கார் ஒன்றில் வந்த ஆவா குழுவினரை, மகேந்திரா வாகனமொன்றில் வந்த மற்றொரு பிரிவு ஆவா குழுவினர் தாக்கியுள்ளனர். தமது வாகனத்தினால் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, காருக்குள் இருந்த ஆவா குழுவினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காருக்குள் இருந்த 4 ஆவா குழுவினர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்பகலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

ஆவா குழு ரௌடிகளிற்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இரு குழுவாக பிரிந்து இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சிதறி ஓடினர். அத்துடன் காவாலிகளுக்கிடையில் தாக்குதல் இடம்பெற்ற போது அப்பகுதியால் பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதலை வேடிக்கை பார்த்தபடி சென்றதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.