புதினங்களின் சங்கமம்

கற்பிட்டிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், சகோதரன் பாரிய அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி!!

கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி எதிர்பாராதவிதமாகக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற உறவினர்களும் பிரதேச மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், அவர்கள் மூவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோகச் சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x