புதினங்களின் சங்கமம்

சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரிபொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின்ஆட்சி சமமாக இருக்கட்டும்! சட்டத்தைஅடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாட உரிமை எங்கள் உரிமை! பறிக்காதேபறிக்காதே, கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து! கலைஞர்களின்குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனேநீக்கு, சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா? கிளிநொச்சிக் கலைஞனை உடனேவிடுதலை செய், பாடினால் சிறையா? பேசினால் கைதா? ஏதேச்சதிகாரக் கைதுகளை,உடனே நிறுத்து, கலைஞர்களின் படைப்புரிமை சட்டப்பூர்வமானது! சட்டம்வழங்கிய உரிமையைஅதிகாரத்தால் பறிக்காதே, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதிக்கக்கற்றுக்கொள்! கொடூரமானபயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) உடனே நீக்குபோன்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

May be an image of one or more people and textMay be an image of one or more people and textMay be an image of one or more people and crowd

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x