குண்டுகளுடன் திரிந்த தேடப்பட்டு வந்த வான் வரக்காபொலவில் சிக்கியது எப்படி??
உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற
குற்றச்சாட்டில் நேற்றிரவு 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், வெடிபொருள் நிரப்பிய வாகனங்களில் ஒன்றான வான் (SG PH-3779) கைப்பற்றப்படதுடன்
அதில் பயணித்த இருவரும் வரகாபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்
பிரிவு தெரிவித்தது.
“பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைத் தேடி நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட
தேடுதலில் நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய பகுதியில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேருவள பொலிஸாரின் தேடுதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், வரகாபொல பொலிஸார்
முன்னெடுத்த தேடுதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் 4 வாக்கி ரோல்கிகளும் மீட்டக்கப்பட்டன.
அவற்றைப் பயன்படுத்தியவர் என ஒருவர் கைது செய்யப்பட்டார்” என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது.