புதினங்களின் சங்கமம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தியாகி பொன் சிவகுமாரனுக்கு நடந்த கதி! ஈ.பி.டி.பி தவராசாவும் நிரோஜனும் அடிபிடி!!

நாளை ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் முன்னோடியான பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்களின் நினைவு தினமாகும். இந்த நினைவு தினத்தை கொண்டாடுவதில் இரு தரப்புக்களுக்கும் இடையில் அடிபிடிகள் நடைபெற்று வருகின்றன. ஈ.பி.டி.பி அமைப்பு முக்கியஸ்தர்களான தவராசா, செந்துாரன், நித்தியானந்தன் ஆகியோர் சிவகுமாரனின் நினைவு தினம் அவரது சிலை உள்ள உரும்பிராய் பகுதியில் கொண்டாடுவதற்கு தாங்களே உரித்துடையவர்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகளை தாங்களே செய்கின்றோம் எனவும் அதனை வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அவர்கள் குழப்ப முற்படுகின்றார் எனவும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்கள். இதனையடுத்து நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் தியாகராஜா நிரோஷ் அவர்களின் அணியினர் நாளை காலை 8 மணிக்கு பொன் சிவகுமாரனின் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் தவராசா அணியினரை அதன் பின்னர் அஞ்சலி செலுத்துவதற்கும் அனுமதி கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவற்றை எல்லாம் சொர்க்கத்திலிருந்து பொன் சிவகுமார் பார்த்துக் கொண்டிருந்தால் அங்கேயே மீண்டும் சயனட் அடித்து தற்கொலை செய்து கொள்வார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x