புதினங்களின் சங்கமம்

இலங்கையில் இரகசியமாக இயங்கிவரும்’ சுப்பர் முஸ்லீம்’ – புலனாய்வுத்துறை அதிர்ச்சி!!

இலங்கையில் இரகசியமாக இயங்கி வந்த ‘சூப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து அண்மையில் உளவுத்துறையினர் தகவல்களை கண்டுபிடித்து வெளியிட்டிருந்தனர்.

குறித்த முஸ்லீம் அமைப்பு “சூப்பர் முஸ்லீம்” என்றும், அதன் தலைவர் கலந்தர் லெப்பை முகமது என்றும் இராணுவ உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது

கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சூப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பில், சுமார் 300 கும்பல் உறுப்பினர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ உளவுத்துறை படி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவருடன் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது

இந்தநிலையில், குறித்த குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று (டிசம்ன்பர் 29) இரகசிய அறிக்கையாக இந்த விஷேட அறிக்கையை கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பு தொடர்பில், எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முன்னர் சேவையாற்றியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பதாகவும், இணையத்தளம் ஊடாக இக்குழுவினர் அடிப்படைவாதத்தை விதைத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஒன்றை அடுத்து கிடைக்கப் பெற்ற நன்கொடைகளை வைத்து இவ்வமைப்பு தோற்றம் பெற்றுள்ளதாகவும், தற்போதும் வெளிநாட்டு நன்கொடைகள் அவ்வமைப்புக்கு கிடைப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பின் தலைவராக கருதப்படும் நபரும் அவ்வமைப்பின் போதகர்களும் யூடியூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், அவ்வமைப்பில் 33 செயற்பாட்டாளர்களும், 250 வரையிலான ஆதர்வாளர்களும் உள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையிலேயே அவ்வமைப்பு தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.