மட்டக்களப்பு புனாணை விபத்தில் பிறைந்துரைச்சேனை இளைஞன் மரணம்.!! மூவர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதி !
மட்டக்களப்பு புனாணை விபத்தில் பிறைந்துரைச்சேனை இளைஞன் மரணம்.!!
மூவர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதி
கொழும்பு-ஓட்டமாவடி பிரதான வீதியில் புனாணை 23வது இராணுவ முகாம் பிரதேசத்தில் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக 20 வயது இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வந்த டிப்பர் வாகனமும் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைதுள்ளதுடன், அதில் பயணித்த அஸ்ஹர் வித்தியாலய வீதி, பிரைந்துரைச்சேனை எனும் முகவரியுடைய ஒரே குடும்பத்தைச்சேர்ந்த (01).அத்தீக் வயது 20, (02).அஸ்ஜத் வயது 20, (03).அஸ்மத் வயது 18, (04).சப்னா வயது 20 ஆகியோர் விபத்தில் சிக்கிய நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 20 வயதுடைய முஹம்மத் அத்தீக் என்ற இளைஞர் மரணமடைந்த நிலையில், மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கும் காயமடைந்த மேலும் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




