உடல் உறவுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட தொழிலதிபர்!! ”நீங்க நல்லவர்தான், எனக்கு வேறு வழியில்லை” என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடித்தப்பிய யுவதி!!
தென்மேற்கு டெல்லியின் சஃப்தர்ஜங் என்கிளேவில் உள்ள ஒரு லாட்ஜுக்குள் 54 வயதான தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக 29 வயது பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
29 வயதான உஷா என்ற பெண் (அஞ்சலி மற்றும் நிக்கி என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டார்) கைதாகியுள்ளார். தொழிலதிபர் மயக்கமாகி விட்டார் என நினைத்து, தப்பியோடும் முன் உஷா ஒரு சிறு குறிப்பையும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதாவது, இந்த சம்பவத்திற்கு தொழிலதிபரிடம் மன்னிப்பு கேட்டு குறிப்பு எழுதியுள்ளார்.
மார்ச் 31 அன்று, தீபக் சேத்த என்ற தொழிலதிபர் லொட்ஜில் இறந்து கிடந்தார். முதல்நாள் இரவு இளம் பெண்ணொருவருடன் வந்து அறையில் தங்கியிருந்தவர், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் வந்த பெண், முதல்நாள் இரவே வேகன்ஆர் காரில் புறப்பட்டு சென்று விட்டார்.
“மறுநாள் காலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது, வாயிலிருந்து நுரை வந்திருந்தது. தலையணையில் கறைகள் இருந்தன. மேலும் அவர் மது அருந்தியதாகவும் தெரிகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.
சேத்தியின் பானத்தில் போதைப்பொருள் கலந்திருந்ததாகத் தோன்றியதாகவும், அவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் மாரடைப்பினால் இறந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து பொலிசார் ஒரு குறிப்பையும் மீட்டனர். “நீங்கள் நல்ல மனிதர், எனக்கு வேற எந்த வழியும் இல்லை, என்னை புரிந்து கொண்டு என்னை மன்னிக்கவும்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற பெண்ணே அந்த குறிப்பை எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு ஹரியானா சிறையில் சந்தித்து நண்பிகளாக உஷா, மதுமிதா என்ற பெண்களே இந்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்றும், வெள்ளிக்கிழமை உஷா கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஹரியானாவில் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு தொழிலதிபரை ஹோட்டல் அறைக்கு வலைவீசி வரவழைத்து தாக்கி கொள்ளையடித்த வழக்கில் மதுமிதா கைது செய்யப்பட்டிருந்தார். மறுபுறம் உஷா, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார், ஒருவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டினார். அவர்கள் ஹரியானா சிறையில் சந்தித்து, சிறையில் இருந்து வெளிவந்த பிறகு டெல்லியில் ஒன்றாக வாழத் தொடங்கினர் என்று ஊடகங்களுக்கு பேச அதிகாரமில்லாத குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறப்பு சிபி (குற்றம்) ரவீந்திர யாதவ் கூறுகையில், ‘‘அஞ்சலி’ என்ற பெயர் கொண்ட பெண்ணை தேட, சேத்தியின் போனில் இருந்த தொடர்புகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண்ணின் எண்ணை கண்டுபிடித்தோம். ஆனால், அந்த எண் போலி ஆவணங்களில் பெறப்பட்டு, மார்ச் 20ஆம் திகதிதான் செயல்படுத்தப்பட்டது. அழைப்பு விவரங்கள் பதிவுகளை மேலும் ஆய்வு செய்ததில், மார்ச் 23 அன்று சாந்த் கர் பகுதியில் மொபைல் ஃபோன் ரீசார்ஜ் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் தனது எண்ணை ரீசார்ஜ் செய்த கடைக்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டது.
நைஜீரிய நாட்டவரான சிடே என்ற கடைக்காரர், அந்த எண் அவரது காதலியான மதுமிதாவின் நண்பியான நிக்கிக்கு சொந்தமானது என்று கூறினார். ஆனால், அவளுடைய முகவரி அவனுக்குத் தெரியவில்லை. மேலும் CDR பகுப்பாய்வு எங்களை நிக்கிக்கு அழைத்துச் சென்றது, அவர் உஷா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டாள். இதனடிப்படையில் உஷா கைதாகி, தொழிலதிபரிடமிருந்து திருடப்பட்ட பல சொத்துக்கள் மீட்கப்பட்டன.
விசாரணையில் மதுமிதாவுக்கு சேத்தியை தெரியும் என உஷா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மார்ச் 30 அன்று, இரண்டு பெண்களும் கன்னாட் பிளேஸ் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர், அங்கு அவர்கள் சேத்தியை சந்தித்தனர். இதையடுத்து தொழிலதிபர் உஷாவுடன் விடுதிக்கு சென்றார்.
உஷா சேத்திக்கு போதை மருந்து கொடுக்க திட்டமிட்டிருந்தாள், அவர் மயங்கி விழுந்ததும், தொழிலதிபரின் பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு உஷா விடுதியிலிருந்து வெளியேறி, கீழே வண்டியில் காத்திருக்கும் மதுமிதாவுடன் தப்பிச் செல்வதே திட்டம். ஆனால், ஆதாரங்களை விட்டுச் சென்றதால் இது முட்டாள்த்தனமாக திட்டமும் கூட“ என பொலிசார் தெரிவித்தனர்.

