மட்டக்களப்பில் கோத்தாவின் சகா சிறுவர்களை வைத்து செய்த தில்லுமுல்லு!
மட்டக்களப்பில் கோத்தாவின் சகாவான சந்திரகுமார் தலமையில் கோத்தாவின் வெற்றிக்கான பிரச்சாரக்கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களில் பெருபாலானவர்கள் குழந்தைகள் என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம்.
இன்று உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நிகழ்வை ஒழுங்கமைத்த சந்திரகுமாரிற்கு இன்று சர்வதேச குழந்தைகள் தினமென தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் கோட்டாவும் மொட்டும் மட்டுமே.
இதேவேளை சந்திரகுமார் சிறுவர்களிடம் பொய்கூறி கூட்டத்திற்கு அழைத்துசென்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சிறுவர்களை இவ்வாறு துஸ்பிரயோகம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், எனவே சம்பந்ததப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சமூக ஆர்வலகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

