இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

கொலை வெறியுடன் பொலிஸ் அதிகாரிகளை புரட்டி எடுத்த ரவுடிகள்: (Video)

புதுச்சேரியில் நடுரோட்டில் வைத்து ரவுடியும் அவனது சகோரனும் சேர்ந்து பொலிஸ் அதிகாரிகளை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரிக்கலம்பக்கம் பகுதியிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வழக்கமான சோதனைச் சாவடி பணியில் இருந்து இரண்டு பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இருவரை தடுத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, அதில் ஒருவன் பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஜோசப் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, ஜோசப் பொலிசாரை தாக்க முயன்றுள்ளான். எனினும், சூழ்நிலையை பொலிசார் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போது, ஜோசப் உடன் இருந்த அவரது சகோதரன் பொலிசாரை தாக்கியுள்ளான்.

நடுரோட்டில் வைத்து இருவரும் சேர்ந்து பொலிசாரை கொலை வெறியுடன் தாக்க, சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், அதை போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த பொலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை அடுத்து தலைமறைவான இரண்டு ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருவதாக புதுச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.