யாழில் பொலிசாரின் துணையுடன் ரவுடிகள் செய்யும் கொடூரம்!! Video

தாக்குதலுக்குள்ளான வயோதிபரும் அவரது துணைவியாரும் வைத்தியசாலையில்
சிகிச்சைபெற்ற நிலையில் தாக்குதல் நடத்தியவருக்கு கோப்பாய் பொலிஸார்
நீதிமன்றின் ஊடாக பிணையில் பெற்றுக்கொடுத்தனர் என்று
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய அயல்வீட்டு இளைஞன் சுதந்திரமாக நடமாடுவதாலும் அவரது
அச்சுறுத்தல் தொடர்ந்தும் தமக்கு இருப்பதாகவும் தெரிவித்து அந்தக்
குடும்பம் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்கள் வீட்டில் கடந்த இரண்டு
வாரங்களாகத் தங்கியுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் வசிக்கும் ரவீந்திரன்
செல்வராசாத்தி என்ற குடும்பப்பெண்ணே யாழ்ப்பாணம் மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி
அட்டூழியத்தில் ஈடுபட்ட அயல்வீட்டு இளைஞனுக்கு பொலிஸார் துணை நிற்பதால்
தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
யாழ்ப்பாணம் அலுவலகம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட
குடும்பம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

No photo description available.

error

Enjoy this blog? Please spread the word :)