யாழில் 10 இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள போதைப் பிரபலம் கைது!
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகர் பகுதியை சேர்ந்த நபர் இன்று (20) 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்
மாவட்ட குற்றத் தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் கடந்த யூன் மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டபோது, அவரை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முயற்சித்த போது தப்பியோடி கோப்பாய் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்துள்ளார்.
இன்று குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தபோது,
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு,நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
