வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த உந்துருளி கோர விபத்து..பரிதாபமாக பலியாகிய இளைஞன்..!! (Photos)
ஓமந்தைப் பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றாா்.தனது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டையிழந்த அவர், வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, படுகாயமடைந்த குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர் 20 வயதுடைய பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் பிரிந்தன் எனத் தெரியவருகின்றது.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

