மருத்துவரான யாழ் சுண்டுக்குழி பழைய மாணவிக்கு கொரோனாவால் 13 நாட்கள்: ஒருவொரு நாளும் என்ன நடந்தது ?
சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்……
யாழி சுண்டுக்குழி பழைய மாணவி. தற்போது அவருக்கு வயது 48. அவர் ஒரு மருத்துவர். அதுவும் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவருக்கு கொரோனா தாக்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தனக்கு என்ன நடந்தது என்பதனை மிக தெளிவாக அவர் எம்மோடும் பகிர்ந்துள்ளார் பாருங்கள்…
நாள் 1: மார்ச் மாதம் 24ம் திகதி. காலையில் எழுந்த உடனே தொண்டையில் கடித்தது. தொண்டையில் ஒரு வித்தியாசம் இருந்தது. மதியம் சரியாக 2 மணிக்கு லேசாக காச்சல் காய ஆரம்பித்தது. 38.2 செல்சியஸ். காச்சலை குறைக்க பரசிட்டமோல் எடுத்துக்கொண்டேன்.
நாள் 2: மார்ச் 25ம் திகதி : காலையில் காச்சல் இல்லை. ஆனால் தடிமன் தோன்றியது. அத்தோடு மதியம் காச்சல் ஆரம்பித்தது. இடுப்புக்கு கீழ் அதீத வலி. கால்கள் எல்லாம் விறைத்து போகும் அளவு வலி காணப்பட்டது. பரசிட்டமோலை எடுத்துக்கொண்டேன்.
நாள் 3: மார்ச் 26ம் திகதி : காலையில் தொண்டை அரிப்பு சற்று குறைந்து காணப்பட்டது: ஆனால் மூக்கு அடைப்பு ஏற்பட்டது. மதியம் திரும்ப காச்சல் ஆரம்பித்தது. கால்களில் வலி தொடர்ந்து இருக்கிறது. பரசிட்டமோல் எடுத்துக்கொண்டேன்.
நாள் 4: மார்ச் 27ம் திகதி : தொண்டை அரிப்பு இல்லாமல் போனது, கால் வலி தொடர்ந்தது. ஆனால் எனது குரல் மாற ஆரம்பித்து இருந்தது. அதாவது தொண்டை கட்டி இருந்தது. மாலையில் காச்சல் ஆரம்பித்தது.
நாள் 5: மார்ச் 28ம் திகதி: காலையிலேயே காச்சல் ஆரம்பித்தது. தொண்டை அரிப்பு மீண்டும் ஆரம்பித்தது. தலைவலி ஏற்பட்டது. பொதுவாக உடம்புக்கு முடியாமல் போனது. வீட்டில் இருந்த 56 வயது நபருக்கும் தொற்றியது.
நாள் 6: மார்ச் 29ம் திகதி: தொண்டை அரிப்பு தொடர்ந்து காணப்பட்டது. காச்சல், தலை வலி. அத்தோடு மூச்சு இழுத்து விடுவதில் மெல்லிய சிரமம் தெரிந்தது.
நாள் 7: மார்ச் 30ம் திகதி: கடும் காச்சல் நிலவியது. சயனஸ் என்று சொல்லப்படும் தலை வலி, முக தாடைகளில் வலி. நெற்றியில் வலி. பசியின்மை காணப்பட்டது. இதனால் எனது மருத்துவரை தொடர்பு கொண்டேன், அவர் எனக்கு doxycycline என்ற அன்ரி பயோட்டின் மாத்திரைய தந்தார்.
நாள் 8: மார்ச் 31: காச்சல் குறையவில்லை.மூச்சு எடுத்து விடுவதில் சிரமம். இரும ஆரம்பித்தது. வைத்தியசாலை சென்று, எனது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு, எனது ரத்த அழுத்தம், இதய துடிப்பு என்பனவற்றை பரிசோதனை செய்து கொண்டேன். சில வேளைகளில் இதய துடிப்பு நிமிடத்திற்கு 100 தரம் கூட அடிக்க ஆரம்பித்தது.
நாள் 9: ஏப்பிரல் 1ம் திகதி: காச்சல் இருந்தது. தலைவலி , மூச்சு எடுப்பதில் சிரமம் இருந்தது. காச்சலை குறைக்க மீண்டும் பனடோல் எடுத்துக் கொண்டேன்.
நாள் 10 ஏப்பிரல் 2ம் திகதி : காச்சல் தலை வலி இருந்தது . இருமல் இருக்கவில்லை.
நாள் 11: ஏப்பிரல் 3ம் திகதி : இன்று தான் எனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையான் என்ற பரிசோதனை முடிவுகள் வந்தது. ஆம் எனக்கு கொரோனா என்பது நிச்சயம் ஆனது. காச்சல் தலை வலி, மூச்சு எடுத்து விடுவதில் சிரமம் தொடர்ந்தும் இருக்கிறது.
நாள் 12 ஏப்பிரம் 4ம் திகதி : கடும் காச்சல் 39.4 டிகிரி. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒரு முறை பனடோல் எடுக்கிறேன். இதய துடிப்பு கூடி இருந்தது. நிமிடத்திற்கு 100 முறை துடித்தது. மூச்சு எடுத்து விடுவதில் சிரமம்.
நாள் 13: ஏப்பிரல் 5ம் திகதி: தலை வலி இருக்கிறது. ஆனால் முதல் தடவையாக காச்சல் நின்று இருக்கிறது. காச்சல் நின்றுவிட்டாலே எமது உடல் தேற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். மூச்சு எடுப்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால் முழு மூச்சாக எடுத்தால் மட்டும் ஒரு திருப்த்தி இருக்கிறது. இன்று நான் சற்று சந்தோஷமாக இருக்கிறேன். என் உடல் நிலை தேறுகிறது என்ற உணர்வு வருகிறது.

