புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிவகாந்தன் எனும் 14 வயதுச் சிறுவன் பலி!!

மட்டக்களப்பு, கித்துள் காட்டுப் பகுதியில் துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயக்கப்பட்டதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டதில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் தனு (வயது-14) என்ற சிறுவன் ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.