Home புதினங்களின் சங்கமம் இலங்கை வரலாற்றில் பெரும் திருப்புமுனை! மகிந்தவின் மனிசி சிறைக்கு அனுப்பபட்டார்!

இலங்கை வரலாற்றில் பெரும் திருப்புமுனை! மகிந்தவின் மனிசி சிறைக்கு அனுப்பபட்டார்!

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.

கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முன்னாள் முதல் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments