Home புதினங்களின் சங்கமம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் ரஜீவன் எம்.பியின் அல்லக்கைகள் அட்டகாசம்! பொதுமக்களின் உபகரணங்கள் பறித்துச் செல்லப்பட்டன!

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ரஜீவன் எம்.பியின் அல்லக்கைகள் அட்டகாசம்! பொதுமக்களின் உபகரணங்கள் பறித்துச் செல்லப்பட்டன!

ரஜீவன் எம்பி வந்தபின் தருவோம் உபகரணங்களை பறித்துச் சென்ற பிரஜா சக்தி தலைவர்.

கோப்பாய் பிரதேச செயலகத்தால் பிரஜா சக்தி திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உபகரணங்களை பிரதேச செயலகத்திலிருந்து பயனாளிகள் எடுத்துச் செல்ல முற்பட்டபோது உரும்பிராய் மேற்கு பிரஜா சக்தி தலைவர் உபகரணங்களை பெற முடியாது ரஜீவன் எம்பி வந்த பின்னரே உங்களுக்கு தர முடியும் என அனைத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

பறித்துச் செல்லப்பட்ட பொருட்கள் உரும்பிராய் மேற்கு பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றில் பிரயாசக்தி தலைவரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயற்பாட்டால் பயனாளிகள் விரத்தி அடைந்துள்ளனர்