புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் சிவன் கோயில் புனரமைப்பு பணிகளின் போது, நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூட்டின் எச்சங்கள் வெளிப்பட்டது.


புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நெருக்கமாக, கடற்கரையோரமாக எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

அது மிகப்பழையதாக தோன்றுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, குமுதினி படகு படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் புங்குடுதீவு வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாகவும், அவரது சடலமும் வைத்தியசாலைக்கு அண்மையாக கடற்கரையோரமாக புதைக்கப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

எனினும், மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சம் குமுதினி படுகொலை காலப்பகுதிக்குரியதா என்பது ஆய்வின் பின்னரே உறுதியாகும்.