ஹபரணப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகள்!! நடந்தது என்ன?
ஹபரனை – ஹிரிவடுன்ன – வெவ்பிட்டிய மற்றும் துப்பிக்குளம் வனப்பகுதிக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 யானைகள் கர்ப்பமுற்ற யானைகள் என கூறப்படுகிறது.
நேற்று 4 யானைகளும் இன்று மதியம் வரை 3 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த யானையொன்றின் உடலுக்கு அருகில் குட்டி யானை ஒன்று தன் தாய் யானையை தேடி சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
இரண்டு யானைகள் தொடர்பாக நேற்று மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த யானைகள் இயற்கை காரணங்கள் அல்லாத காரணங்களினால் உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், ஏனைய யானைகளின் உடல்கள் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெறுகின்றன
பதிவு : nirujan selvanayakam





