வவுனியாவில் நள்ளிரவு ‘நிழல்’ மனிதர்கள் – தூக்கத்தை தொலைத்த பூந்தோட்டம் மக்கள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் அரங்கேறி வரும் சினிமா பாணி திருட்டுச் சம்பவங்களால், மக்கள் பீதியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்! 

யாரோ.. எப்போது.. எப்படி வருகிறார்கள் என்பதே தெரியவில்லை! நள்ளிரவு வேளைகளில் ஜன்னல் கம்பிகளையும், கதவுகளையும் மிகச் சத்தமில்லாமல் உடைப்பதில் இவர்கள் ‘கைதேர்ந்தவர்களாக’ இருக்கிறார்கள். 
வீட்டின் உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதே, அவர்கள் அருகிலேயே இருக்கும் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்லும் துணிகரம் அனைவரையும் அதிர வைத்துள்ளது!
கடந்த சில தினங்களில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்துடன் மர்ம நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். “நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் திருடன் வந்திருக்கிறான் என்று நினைக்கும் போது உடம்பு நடுங்குகிறது” எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். 

இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் குவிந்து வருகின்றன. மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களைப் பிடிக்க வலை விரித்துள்ள பொலிஸார், இரவு நேர ரோந்துப் பணிகளையும் தற்போது அதிகரித்துள்ளனர். 

”எங்கள் பகுதியில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை! வீதிகளில் நடமாடும் மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்யுங்கள்” எனப் பூந்தோட்டம் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை!
இரவு நேரங்களில் வீட்டின் வெளிச்சத்தை (Outdoor Lights) எரிய விடுங்கள்.
மேலதிக செய்திகளுக்கு இந்த பக்கத்தைத் தொடருங்கள்! 


