புதினங்களின் சங்கமம்

பொன்னாலையில் 3 வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல், ஓடுகள் சேதம்

பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (25) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே வீழ்ந்த போதிலும், வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீமாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் உரிய புலன் விசாரணைகளை மேற்கொண்டு, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.