புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து தலையை வெட்டிச்சென்ற பயங்கரம் – வவுனியாவில் பரபரப்புச் சம்பவம் Video
வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்தபகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சென்று அந்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது பெற்றோர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

