புதினங்களின் சங்கமம்

கள்ள மண், போதைப்பொருள் வியாபாரத்துக்கு தமிழரசுக் கட்சி உடந்தையா? யாழில் பொலிசாரை கள்ள மண் வாகனத்தால் இடித்துக் கொன்ற காவாலி சயந்தன் லோயர் மூலம் நீதிமன்றில் சரண்!! அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த காவாலி  5நாட்களின் பின்னர் மற்றொரு காவாலியான சட்டத்தரணி சயந்தன் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது.

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி  சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.

பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளான்.

உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட்  (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபரான 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காவாலி சட்டத்தரணி சயந்தன் ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரியில் போதைப்பொருள் மற்றும் மணல்கடத்தல் மாபியாக்களுக்கு முக்கிய பாதுகாவலனாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரனின் அடிவால் சயந்தனே செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.