கீரிமலைக்கு செல்பவர்களிடம் பொம்பிளைப் பிள்ளையை வைத்து காசு பிடுங்கும் சுகிர்தன்!
தமது உறவுகள் நினைவாக கீரிமலைக்கு செல்பவர்களிடம் வலி வடக்கு பிரதேசசபை நியாயமற்ற முறையில் பணம் பிடுங்குவது பொதுமக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்பவர்களிடம் மட்டும் அங்குள்ள அந்தியேட்டி மட நிர்வாகம் ஆயிரம் ரூபா பணம் வசூலித்து வந்தது. தற்போது அந்த மடம் வலி வடக்கு பிரதேசசபையிடம் கை மாற்றப்பட்ட பின் அந்த மடத்தில் அந்தியேட்டிக் கிரிகைகள் செய்பவர்களை மட்டுமல்லாது கீரிமலைக்கு வெளியிடங்களிலிருந்து வந்து தமது உறவுகளின் அஸ்த்தியைக் கரைப்பவர்கள் மற்றும் இறந்த உறவுகளின் நினைவுக்காக அங்கு வந்து குளிப்பவர்களிடமும் குறித்த பிரதேசசபை ஆயிரம் ரூபா பணத்தை கட்டாயப்படுத்தி அறவிட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணம் பிடுங்கலுக்குப் பொறுப்பாக வலி வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் பெண் ஒருவரை நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

