யாழில் பங்குத்தந்தை 2 பொம்பிளைப்பிள்ளைகளை ஆசையாய் அழைத்தார்!! சில்லாலையில் சாதிச் சண்டை!! கதிரைமாத கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது!!
யாழ் சில்லாலைப் பகுதியில் குட்டி ரோம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல நுாற்றாண்டு கால புரதான ஆலயமான புனித கதிரைமாத கோவில் பங்குத் தந்தையின் செயற்பாட்டால் சில்லாலை புனித ஜோசவ வாஸ் திருத்தல பெருவிழா தடைப்பட்டுள்ளது. சில்லாலை புனித கதிரை மாதப ஆலய பங்குத் தந்தையான சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தமிழ்த்தேசிய உணர்வாளர் என பலராலும் அறியப்பட்டவர். இவரது சகோதரர் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்து சண்டையில் பலியானவர். ஆம்ரோங் தென்னிலங்கை பேரினவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். ஆனால் தனது பங்குப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கும் சாதிப் பிரச்சனையை அடக்கமுடியாது திண்டாடுகின்றார். அதற்கு காரணம் அவரேதான் என குறித்த கதிரை மாதா கோவில் பங்குமக்கள் கூறுகின்றார்கள்.
சில்லாலை உயர்சாதி கிறீஸ்தவர்கள் அதிகம் வாழும் பிரதேசமாகும். குறித்த பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் கிறீஸ்தவர்களாக வாழ்கின்றார்கள். ஆம்ஸ்ரோங் வட்சப் குழுக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளால் இரு பிரிவுகளையும் இணைத்து செயற்பட்டு வந்துள்ளார். உயர் சாதி, தாழ் சாதி என பாகுபாடு காட்டாது இருபகுதியினரும் ஆம்ஸ்ரோங்கின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளார்கள். அண்மையில் கதிரைமாத கோவிலின் கட்டுப்பாட்டில் புதிதாக கட்டப்பட்ட புனித ஜோசவ வாஸ் திருத்தலதின் பெருநாளுக்காக கோவிலில் இறை கானம் பாடுவதற்காக ஒரு சாதியைச் சேர்ந்த இரு யுவதிகளை தேர்வு செய்தமை காரணமாக இரு தரப்புக்களுக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. அந்தச் செயற்பாடு பூதாகரமாக கோவில் பெருநாள் தடைப்பட்டுப் போனது. தற்போது சில்லாலை இரண்டுபட்டு பெரும் அடிதடி கலவரமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் ஆம்ஸ்ரோங்கின் செயற்பாடு என குறித்த ஆலய பங்கு மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். இரு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களையும் சேர்த்து இறை கானம் பாடுவதற்கு நடவடிக்கை எடுக்காது தனியே ஒரு சாதிப்பிரிவைச் சேர்ந்த இரு யுவதிகளை மட்டும் பாடுவதற்கு பாதர் அழைத்தமையே முறுகலுக்கு முக்கிய காரணம் எனத் தெரியவருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் இரு பகுதியினரிடையேயும் இச் சம்பவத்தால் அடிக்கடி மோதல் உண்டாகியுள்ளது. இதுவரை இரு தரப்பு மோதல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு ஆம்ஸ்ரோங் முயற்சிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.
இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்ட பங்குமனை





