அமசடக்கா இருந்து அலுவல் பார்க்கும் ரணில்!! இலங்கையில் பிரபல யூரியுப்பர் கைது!! எதற்காக?
இலங்கையின் பிரபல யூடியூபர் ரதிது சுரம்யா என்ற ரட்டா என்பவர் இன்று கொம்பைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்தது உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ரட்டா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்த ரட்டாவை கொம்பனித்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் காலி முகத்திடலில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகராக ரட்டா அறியப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களை நசூக்காக அகற்றுவதற்கு ரணிலின் ராஜதந்திரமான நகர்வுகளை செய்து கொண்டிருப்பது இதிலிருந்து வெளியாகின்றது. போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது போல் கொடுத்து இவ்வாறான செயற்பாடுகளை ரணில் செய்து கொண்டிருக்கின்றார் என சமூகவலைத்தளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
