யாழ் சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து தப்பியோடியவர்களால் பரபரப்பு!! ஒருவர் கைது!! மற்றவர் தலைமறைவு!!
சாவகச்சோி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிறைக்காவலர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளபோதும் மற்றய நபர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது. ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான குறித்த இரு சந்தேகநபர்களும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட நிலையில் சிறைக் காவலர்களின் பிடியிலிருந்து சந்தேகநபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டபோதும்,
மற்றொரு சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.

