புதினங்களின் சங்கமம்

பிக்குவின் உடலைவைத்து வடக்கில் அரசியல் நாடகம்!

முல்லைத்தீவில் உயிாிழந்த பிக்குவின் உடலைவைத்து சிலா் வடக்கில் அரசியல் நாடகம் நடாத்தி யிருக்கின்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பிக்குகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளமைக்கு நாம் வெட்கித் தலைகுனிகின்றோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

நீதிமன்றம் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய பொருத்தமான இடமொன்றை வழங்கியிருந்த போதும், அதனை மீறி நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்தமாதிரி பெளத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளதையும் பிரதமர் கண்டித்துள்ளார்.

இதற்கு கொழும்பில் இருந்து சென்ற தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் இன மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டும்வகையில் முல்லையில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியை பிடிக்கத்துடிக்கும் ஒரு தரப்பினர் இயங்குகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனக்கூறிய பிரதமர், இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.