Home புதினங்களின் சங்கமம் மன்னாரில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி!! அதிர்ச்சிக் காட்சிகள்!! (Photos)

மன்னாரில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி!! அதிர்ச்சிக் காட்சிகள்!! (Photos)

மன்னார், முருங்கன் பகுதியில் நேற்று (23) இரவு 7 மணி அளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தியே உயிரிழந்தனர்.

அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இராசதுரை பிரசாந் (வயது 24) மற்றும் கணேஷ் தயாளன் (வயது19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியானவர்களாவர்.

அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்ற போது அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகினர்.

உடனடியாக அருகில் உள்ள முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு உடல்களும் உடல் கூறு பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடைபெற்ற இடமானது சிறிய வளைவு வீதியோரத்தில் பற்றைகள் நிறைந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில வருடங்களுக்கு முன் இதே இடத்தில் விபத்தின் மூலம் ஒருவர் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.