புத்தளத்தில் சிரேஸ்ட ஒளிபரப்பாளரின் தந்தை படுகொலை!
சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எல். இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.!
நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று22 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய, 4ம் குறுக்குத்தெருவில், வசித்து வந்த ஆதம்பாவா அப்துல் லதீப் என்பவரே இனம் தெரியாதோரால் கொலை சொய்யப்பட்ட நிலையில் இன்று (22/02/206 ) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று (21.02.2026) இரவு 9.00 மணியளவில் தனது YB 6811 இலக்க சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்றவர், நேற்று இரவிலிருந்து காணவில்லை.
அவரது உறவினர்களால் நேற்று இரவு முதல் இவர் தேடப்பட்ட நிலையில் இன்று (22/02) காலை தில்லையடி, ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி( 600 வீட்டுத்திட்ட) பிரதான வீதியினூடாக
கல்லடி நோக்கிச்செல்லும் உள்வீதியின் தோட்டப்பகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டி வேரொரு பகுதியான அல்கஸிம்சிட்டியின் பின்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






