புதினங்களின் சங்கமம்

திருமணமாகி 7 நாட்களேயான புதுமண பெண்ணின் மீது ஏறிய லொறி

வீதி விபத்தில், திருமணமாகி 7 நாட்களே ஆன இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் 7 நாட்களுக்கும் முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பியும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி பயணித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தின்போது வீதியின் நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் உடல்நசுங்கி உயிரிழந்தார். பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தது, மூவருமே தலைக்கவசம் அணியாமல் வந்தது என இந்த விபத்தில் விதிமீறல்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது.

சில நூறு ரூபாய் விலைகொண்ட தலைக்கவசத்தை வாங்கி அணிய மறுப்பதால் விலை மதிப்பே இல்லாத இதுபோன்ற உயிர்கள் பலியாவது தொடர்கதையாகிறது.