யாழ் அச்சுவேலியில் அதி வேகத்தில் கார் ஓட்டி மரத்தில் மோதுண்டு சாரதி பலி!! ! (Video)
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதிவிபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.









