புதினங்களின் சங்கமம்

சங்குப்பிட்டி பாலத்தில் தீபாவின் சடலம் மீட்கப்பட்டு ஒரு மணித்தியாலம் கூட ஆகத நிலையில் மற்றொரு யுவதி அப்பகுதியில் என்ன செய்தாள்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் காரைநகரைச் சேர்ந்த குடும்பப் பெண் தீபாவின்  சடலம் கரையொதிங்கி ஒருமணித்தியாலம் ஆகாத நிலையில்,

ஒரு இளம்பெண் தன்னந்தனியாக கரையொதிங்கிய சடலம் இருப்பதையும் தெரியாமல் வீதியில் நடந்து செல்கிறாள். ( சில நிமிடங்கள் பின் வந்த இளைஞன் மோட்டார்சைக்கிளில் ஏற்றிச்செல்கிறான்)

வீட்டில் வகுப்பிற்கு செல்வதாக கூறி வந்திருக்கலாம் அல்லது ஏதோவொரு காரணத்தை கூறி வந்திருக்கலாம்.

யாரோ ஒருவரில் உள்ள நம்பிக்கையில் தனியாக நடந்து செல்கையில் துரதிஸ்ட வசமாக சிறு விபத்தோ அல்லது அசௌகரியமோ நடக்கலாம். என்பதை இவள் அறியமாட்டாள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போனில் அவர்கள் செல்லும் இடங்களை கண்காணிக்க Location Tracking என எத்தனையோ வசதிகள் உண்டு. அவற்றை பயன்படுத்துங்கள்.

வேகமாக ஓடும் உலகில் எவருக்கும் வேகமாக எதுவும் நடக்கலாம். பெற்றோர்கள் நினைத்தால் பல அசௌகரியங்களை தவிர்த்து எமது எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்கலாம்.