புதினங்களின் சங்கமம்

யாழில் T-56 துப்பாக்கியுடன் சந்தைக்கு சென்று திருவிளையாடல் செய்தவர் அருச்சுனாவைப் போன்ற நடத்தையுடையவரா? வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்… 

இன்று காலை மருதனார்மடம் சந்தைக்குள் துப்பாக்கியுடன் சென்று கலகலப்பூட்டிய நபரை சுன்னாகம் பொலிசாருடன் இணைந்து காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெல்லிப்பளை பட்டிக்கடவைக்குள் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
குறித்த நபர் ஒரு கிழமைக்கு முன் சுன்னாகம் பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றில் குறித்த போலி T-56 துப்பாக்கியையும், ஒரு கை துப்பாக்கி ஒன்றையும் கொள்வனவு செய்ததாய் அறிய முடிகின்றது.
சுன்னாகம் பொலிசாருடன் இணைந்து காங்கேசன்துறை குற்ற தடுப்பு பிரிவினர் திறமையாக செயற்பட்டு அந்த நபரை உடன் கைது செய்தனர்.
குறித்த நபர் ஒரு மன நோயாளி எனவும். அவர் மன நோயாளுக்குரிய விசேட அட்டையை உடமையில் வைத்திருந்தார் எனவும் அறிய முடிகின்றது.  யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவும் இடுப்பில் ஒரு துப்பாக்கியைக் கட்டிக் கொண்டு திரிவதைப் பார்த்து இவரும் இவ்வாறு செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது.


No photo description available.No photo description available.May be an image of timber yard and oil refineryNo photo description available.