யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயதுக் காவாலிக்கு அப்பா, அம்மா, சித்தியே எமனாக மாறினார்களா?
இன்று அதிகாரை 1.30 மணியளவில் அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிசார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் வான் ஒன்றை செலுத்தி வந்த வட்டுக்கோட்டை வடக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய காவாலி உயிரிழந்துள்ளான். குறித்த வாகனத்தில் வந்த மேலும் 2 காவாலிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் வாகனத்தை மறிக்க மறிக்க ஓடியும் அவர்களை இடித்து தள்ளிவிட்டு செல்ல முற்பட்ட போதுமே பொலிசாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிசார் ஒருவனை சுட்டுக் கொல்வது என்பது அவர்களை நியாயப்படுத்துவதாக இருக்க கூடாது. ஏனெனில் சுட்டுக் கொல்லப்படுபவன் எவ்வகையான குற்றவாளி என்றாலும் அவனை மிகக் குறைந்த அளவான பலப்பிரயோகம் அல்லது முட்டிக்கு கீழ் சுட்டே பிடிப்பதற்கே பொலிசாருக்கு சட்டத்தில் இடமுள்ளது. தமது உயிரு்க்கு குற்றவாளியால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மாத்திரமே அவனை சுட்டு முடக்குவதற்கு அனுமதி உண்டு.
ஆகவே பொலிசார் குறித்த காவாலியைக் கொன்றமை தொடர்பாக அவர்களுக்கு விசாரணையின் பின்னரான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
அது ஒரு புறம் இருக்க…..
சாரதி அனுமதிப்பத்திரமே எடுக்க முடியாத வயதான ஒரு சிறுவனுக்கு வாகனத்தை கொடுத்து நள்ளிரவு வேளை அவனுடன் மேலும் இருவரை அனுப்பி வயலுக்கு நெல்லு அரிய சென்றதாக அவனுடைய சித்தி கூறும் தகவல்களை சின்னப்பிள்ளை கூட நம்புமா?
குறித்த காவாலியுடைய குடும்பமே குற்றச் செயல் பின்னணியுள்ள குடும்பம் எனத் தெரியவருகின்றது. பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுவனை இவ்வாறு வாகனம் ஓடச் செய்தது யா? அவனுக்கு அந்த வாகனத்தை கொடுத்தது யார்? எதற்காக குறித்த பகுதிக்கு நள்ளிரவு சென்றார்கள்? வாகனத்தின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்தது ஏன்? கஞ்சா பொதிகள் கடத்தவா? கள்ள மாடு கடத்தவா?
17 வயதிலேயே குற்றம் செய்ய துணிந்த இந்தக் காவாலி வயது ஏற ஏற எப்படியான ஒரு குற்றப் பின்னணியுடன் திரிவான் என்பது யாருக்காவது விளங்குமா?
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் மிக நுணுக்கமாக விசாரணைகளை மேற்கொண்டு பேட்டி கொடுத்த குறித்த காவாலியின் சித்தி மற்றும் வாகனம் கொடுத்தவர்கள்“ உட்பட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துதல் வேண்டும்.

