புதினங்களின் சங்கமம்

யாழில் சைக்கிளில் வங்கி சென்ற யுவதி திடீர் மரணம்!! நடந்தது என்ன?

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25.06.2019) மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளைகளின் தாயான ஜெரோசன் தயாளினி (வயது-28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படி பெண் மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவத்தின்போது, அப்பகுதியில் நின்றவர்கள் குறித்தப் பெண்ணை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவமானது, கடும் வெப்பத்தினாலேயே நிகழ்ந்திருக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.