புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் கஞ்சா வியாபாரி செய்யும் கேவலம்!! திணறும் பொதுமக்கள் (Photos)

வுனியா பண்டாரி குளத்தில் உள்ள நபர் ஒருவர் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக அயல்வீட்டுக்காரர் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கஞ்சா வியாபாரி அதற்காக பலதடவை பொலிசிற்கு சென்றுள்ளபோதும், சில நாட்களில் வெளியே வருவது வழமையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா வியாபாரம் செய்யும் குறித்த நபர் கஞ்சாவை தானும் புகைப்பதோடு, வீதியில் நின்று , வீதியால் பயணிக்கும் பெண்களிடமும், நபர்களிடமும் அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதும் வழமையான விடயம் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பருடன் வீட்டிற்கு முன்பாக நின்று கதைத்துக் கொண்டிருக்கும் சமயம், குறித்த கஞ்சா வியாபாரி தன்னையும் நண்பனையும் தகாத வார்த்தைகளால் பேசி நண்பனுடைய மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பண்டாரிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டபோது அவர்கள் வவுனியா போலிசில் முறைப்பாடு செய்யும்படி கூறியதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க குறித்த கஞ்சா வியாபாரி இன்று காலை குறித்த அயல்வீட்டின் கதவை சேதப்படுத்தியதோடு கற்களை வீட்டிற்குள் எறிந்து யன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்ட நபர் இன்று காலை வவுனியா பொலிஸ்நிலையம் சென்று முறைப்பாட்டை வழங்கியபோதும் மதியம் 12 மணி ஆகியும் விசாரணைக்காக பொலிசார் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பொலிசார் தமது கடமைகளை உடனடியாக செய்ய தவறுவதால் பலசமயங்களில் அப்பாவி மனிதர்களை போதையில் உள்ளவர்கள் கொலையும் செய்வார்கள் என்பது யதார்த்தமான உண்மை எனவும் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.