முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான சுரேஷ் காவாலி கள்ள மணலுடன் கைது.
சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் சுரேஷ் திருட்டு மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் பொலிஸ் உத்தியோத்தராக இருந்தபோது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னரும் தனது சகபாடி பொலிஸ் மேலதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் காங்கேசன் துறை விசேட குற்றப்பிரிவு போலீசார் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை மறிக்க முற்பட்டபோது வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் என்பவன் தப்பி ஓடினான்.
போலீசார் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தப்பி ஓடிய சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


