மட்டக்களப்பு – களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (காலை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர், களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த வடிவேல் வினோதன் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவம், குடும்பத்தினரையும் கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 





