ரணிலின் முன்னாள் செயலருக்கு விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தது தொடர்பான வழக்கில் ஏக்கநாயக்க இரண்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு பொது சொத்துக்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

