புதினங்களின் சங்கமம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முயன்ற முன்னணி; பொலிஸ், இராணுவம் குவிப்பு (2ஆம் இணைப்பு, காணொளி)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ள முற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை தடுத்து நிறுத்துவதற்காக பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர், மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட்ட பிரமுகர்கள் அந்தப் பகுதியில் ஒன்று கூடினர்.

சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் வருகை தந்தனர்.

அதனை அடுத்து இவ்வாறு கூடுவதை இந்தக் காலத்தில் அனுமதிக்க முடியாது என படைத்தரப்பினரும் பொலிஸாரும் முன்னணியினருடன் முரண்டுவருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகின்றது.