மணல் கடத்தலுக்கு எதிராக செயற்பட்ட குடும்பஸ்தரை டிப்பரால் மோதிக் கொன்ற விஜி! நீதிமன்றால் விடுவிக்கப்பட்டது ஏன்? இன்று குடும்பஸ்தரின் அண்ணாவையும் அதே டிப்பரால் மோதினான்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
கிளிநொச்சியில் இடம்பெற்ற மற்றுமொரு கொலை முயற்சி!
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சட்டவிரோத மணல் அகழ்வோரால் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் வீதியில் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது திட்டமிட்டு குறித்த குடும்பஸ்தரை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தினால் மோதி கொலை செய்தமை சிசீடிவி காணொளிகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்டவர் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக குரல் கொடுப்பவர் எனவும் அவர் பல தடவைகள் அச்சுறுத்தப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்தது.இதனை அடுத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டு சில நாளில் கொலையாளிகளின் சகாக்களால் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் நண்பிக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து வாகன சாரதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் இன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை கொலை செய்யப்பட்டவரின் அண்ணாவை திட்டமிட்டு மோதி தள்ளியுள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் இடமீபெற்றிருந்தது.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் அசமந்த போக்காக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


