யாழ் குருநகரில் வீட்டினுள் குண்டு வெடிப்பு!! ஒருவர் படுகாயம்!!
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த
நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர்.
“அந்த வீட்டில் தனிமையில் வசித்து வருபவர் டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும் போது அது
வெடித்துள்ளது. சம்பவத்தில் அவர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அத்துடன்,
பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.