வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!
நேற்று மாலை வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் சிவலிங்கம் டனுசியன் நீரில் மூழ்கிப் பலியானான். குறித்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது. உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.



