குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்கள்!!
குவைத்க்கு தொழிலுக்காக சென்றிருந்தபோது உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருமாறு இளைஞனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீகிரியா இலுக்வல பகுதியில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற இளைஞன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சகோதரியான ஷஷினி மல்சானி, கடந்த 20ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் இன்றையதினம் (28) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக ஷஷினி மல்சனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மீண்டும் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும், வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் இளைஞன் எழுதிய கடிதம் ஒன்று இளைஞனின் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டதாகவும், உயிரை மாய்த்துக்கொள்வதாக தனது தாயாருக்கு அதில் எழுதியிருந்ததாகவும் வாட்ஸ்அப் ஊடாக குறித்த கடிதம் கிடைத்ததாகவும் சகோதரி தெரிவித்துள்ளார்.
“எனக்கு அரபு மொழி நன்றாக பேசத் தெரியும். அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசினேன். உங்களது மகன் கார் விபத்தில் சிக்கி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சனை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.