யாழ் ஐந்து சந்தியில் 3000 போதை மாத்திரைகளுடன் ஒருவன் கைது!
யாழ்ப்பாணம், ஐந்து சந்தி பகுதியில் போதை மாத்திரை வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஐந்து சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

