புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..! Photos

காலாவதியான அனுமதிப் பத்திரத்தைப் பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை இன்று வெள்ளிக்கிழமை(09.01.2026) காலை சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை மறித்து சோதனை செய்திருந்த நிலையிலேயே காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்திவரப்பட்டுள்ளன.
அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும்,மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தவுள்ளனர்.
May be an image of timber yard and text