புதினங்களின் சங்கமம்

கண்ணாடி விரியன் கடித்து கிளிநொச்சியில் 22 வயது கிருசிகன் பலி!! அவதானம் மக்களே!!

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன், கல்மடு நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சிரமதான பணியில் ஈடுப்பட்ட பொழுது பாம்பு கடிக்கு இலக்கான இளைஞரை அங்கிருந்தவர்கள், தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of one or more people, people smiling and textMay be an image of snake