புதினங்களின் சங்கமம்

காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கழட்டிவிடப்பட்ட காதலி போல் சிறைக்குள் திகைத்து நின்றார் டக்ளஸ்!! நடந்தது என்ன?

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…

சிறைச்சாலையின் அந்த குறுகிய வராந்தாவில் மரண அமைதி நிலவியது.

துருப்பிடித்த இரும்பு கம்பிகளுக்குப் பின்னால், கண்கள் குழிவிழுந்த நிலையில் டக்ளஸ் நின்றிருந்தார்.அவர் கண்கள் கெஞ்சலையும் ஆத்திரத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தின.

எதிரே நின்றிருந்த நாமலிடம் தழுதழுத்த குரலில் கேட்டார், “தம்பி… என்னை எப்ப வெளியில எடுப்பீங்கள்?”

நாமலின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. தன் வெள்ளைச் சட்டையின் கைமடிப்பைச் சரிசெய்தபடி, பக்கத்தில் நின்றிருந்த அர்ச்சுனாவை பார்த்து மெல்லியதாகச் சிரித்தார்.

“உங்களை இப்ப அவசரமாக வெளியில எடுக்கத் தேவையில்லை டக்ளஸ்,” நாமலின் குரல் நிதானமாகவும் அதிகாரத் தோரணையுடனும் இருந்தது.

“ஏன் தம்பி? வடக்குல உங்களுக்கு நான் தேவைப்படுவனே?” டக்ளஸ் பதற்றமானார்.

“தேவைப்பட்டீங்கள்… ஆனா இப்ப நிலைமை மாறிட்டு. வடக்கில நீங்க முன்னாடி துப்பாக்கியால செய்த வேலையைச் செய்ய இப்ப இவன் இருக்கிறான்,” என்றார் நாமல்.

“கஜேந்திரகுமாரும், சிறீதரனும், சுமந்திரனும் சேர்ந்து தையிட்டி விகாரையை இடிக்கப் போறாங்கன்னு ஒரு புரளியைக் கிளப்பி விடச் சொன்னேன். சொன்ன அடுத்த நாளே, எல்லா சிங்கள ஊடகங்களையும் கூப்பிட்டு, ‘தமிழர்கள் விகாரையைத் தாக்க வர்றாங்க’ன்னு ஒரு பேட்டியைக் குடுத்து மொத்தத் தெற்கையும் பதற வச்சிட்டான்.”

நாமலின் கண்கள் மின்னின. “உங்களை விட இவன் புத்திசாலித்தனமா வேலை செய்யிறான் டக்ளஸ். நீங்கள் துப்பாக்கியால செய்த காரியத்தை, இவன் தன் வாயாலேயே முடிச்சிடுறான். இவன்ர வாய் தான் இப்போதைய நவீன துப்பாக்கி!”

இதைக்கேட்ட டக்ளஸ் ஆத்திரத்தில் கம்பிகளைப் பலமாகப் பற்றினார். “இவனை நம்பாதீங்கள் தம்பி… இவன் ஆடிக்கு ஒரு கதை, அமாவாசைக்கு ஒரு கதை சொல்லுவான். இவன் சந்தர்ப்பவாதி!”

நாமலின் சிரிப்பு அந்தச் சிறை அறை முழுவதும் எதிரொலித்தது.

அவர் டக்ளஸின் முகத்திற்கு அருகில் குனிந்து ரகசியமாகச் சொன்னார்:
“எங்கட வேலை முடிஞ்சதும் உங்களை எப்படித் தூக்கி எறிஞ்சோமோ… அதே மாதிரி இவனையும் எப்போ, எப்படி கைகழுவி விடணும்னு எனக்குத் தெரியாதா என்ன?”

அந்தக் கடைசி வார்த்தைகள் டக்ளஸின் காதுகளில் இடியாக விழுந்தன.

நாமல் அங்கிருந்து விறுவிறுவென நடக்க, அர்ச்சுனா ஒரு நக்கல் சிரிப்புடன் அவரைப் பின்தொடர்ந்தார்.

காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கழட்டிவிடப்பட்ட காதலி போல் திகைத்து நின்றார் டக்ளஸ்