புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையால் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை

கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை
நிலையங்களில் தொடர்பில் தீடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று (12)
முன்னெடுத்திருந்தனர்.

இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய
விலையினை பொறித்த அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கெதிராகவும் விலை
காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு
எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.